திங்கட்கிழமை
Monday, December 13, 2010
4 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவு
திங்கட்கிழமை
க. பொ. த சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்
பரீட்சார்த்திகள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனுமதி அட்டைகளுடன் பரீட்சை ஆரம்பமாவதற்கு சுமார் 30 நிமிடத்துக்கு முன்னதாகவே பரீட்சை மண்டபத்துக்கு வரு மாறும், பரீட்சை மண்டபத்துக்குள் செல்வதற்கு முன்னர் அனைவரும் உடல் பரிசோதிக்கப்பட்டே அனும திக்கப்படுவார்கள் எனவூம் பரிட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
தற்போது மழைக்காலம் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளுடன் வரு மாறும் ஆணையாளர் பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு முழுவது முள்ள 3804 பரீட்சை நிலையங்களிலும் 60,000 பரீட்சகர்கள் கடமையாற்றவூள்ளனர். 3 இலட்சத்து 94 ஆயிரத்து 603 பாடசாலை மாணவர்களும், ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 813 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இந்த பரீட்சைக்குத் தோற்றவூள்ளனர்.
பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சை அனுமதி அட்டையூடன் தமது ஆளடை யாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் தேசிய அடையாள அட்டை அல்லது தபால் மா அதிபரினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். இறுதி நேரம்வரை இவ்விரண்டு அடையாள அட்டைகளையூம் பெற முடியாமல் போனவர்கள் அதிபரிடம் பெறப்பட்ட உறுதிப்படுத்தல கடிதமொன்றை பரீட்சை ஆரம்பமாகும் முதல் நாளன்றே பரீட்சை மண்டபத்தின் பிரதான பரீட்சகரிடம் காண்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணை யாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
பரீட்சை மண்டபத்தினுள் அனுமதி அட்டை,அடையாள அட்டை, பேனை, பென்சில் தவிர்ந்த வேறு பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
சிவப்பு நிற, ஊதா நிற பேனைகள்,அழி இறப்பர்கள், டிப்பெக்ஸ்கள், ஹைய்லைட் வர்ண பேனைகள் என்ப வற்றை எடுத்துச் செல்லுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது
Friday, December 10, 2010
பரிசளிப்பு வைபவம்:
10.12.2010
வெள்ளிக்கிழமை
பத்திரிகைகள் விநியோகிக்கப்படாமையால் வாசகர்கள் சிரமம்:
வெள்ளிக்கிழமை
Tuesday, December 7, 2010
ரிஷானாவின் தண்டனை நிறுத்தம்
இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ரிஷானாவின் தண்டனையை ரத்துச் செய்யும் அதிகாரம் சவுதி மன்னருக்குக் கிடையாது என்றும் இறந்த குழந்தையின் பெற்றோர் இணங்கும் பட்சத்திலேயே தண்டனைக்கான இரத்தப்பணம் வழங்கப்பட்டு ரிஷானாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் அந்த ரத்தப்பணம் எனப்படுகின்ற, கொலைக்கு மன்னிப்பு வழங்கப்படுவதற்காக அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைப் பணத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்த மரணதண்டனை இடைநிறுத்தம் குறித்த செய்தியைக் கேட்டு ரிஷானாவின் தாய் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Saturday, December 4, 2010
தொடரும் மழையுடன் கூடிய காலநிலை:
கிண்ணியா கடற்பரப்பில் “டொல்பின்“கள்:கிண்ணியா கடற்பரப்பில் “டொல்பின்“கள்:
கிண்ணியா கடற்பரப்பில் தோன்றும் பாம்புகள்:
கட்டையாற்றுப் பாலத்தின் கீழ் திடீரென படையெடுத்த பாம்புகள்:
-http://kinniyaexpress.com-
கிண்ணியாவில் கலாச்சார மண்டபம் அமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை:
-Kinniyaexpress.com-
Tuesday, November 30, 2010
கிண்ணியாவில் அடைமழை
Monday, November 29, 2010
கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை.
கிண்ணியா நகரசபைக்குட்பட்ட தெருக்களில் கட்டாக்காலி ஆடு,மாடுகளைக் கட்டுப்படுத்த கிண்ணியா நகரசபை நடவடிக்ககை எடுத்துள்ளது.இதற்காக கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதற்காக பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வறிவித்தலின் பின் வீதிகளில் மேற்படி கால்நடைகள் காணப்படின் பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-Kinniya Express Team-
Sunday, November 7, 2010
வடக்கு, கிழக்கு கடல் கொந்தளிப்பு:
வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலில் மீனவர்கள் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஜல் சூறாவளி இலங்கைக்கு அப்பால் சென்று விட்டது. என்றாலும் இச்சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் கொந்தளிப்பாக உள்ளது. இக் கடற் பரப்பில் தொடராக இடிமின்ன லுடன் மழை பெய்யும் அதேநேரம் இக் கடற் பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.
காற்று வட மேற்காக வீசும். இப்பிரதேசங்களில் மணித்தியால த்திற்கு 30 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் காற்று 60 - 70 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரிக்க முடியும். இதன் காரணத்தினால் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Wednesday, November 3, 2010
சவுதியில் குற்றம்சுமத்தப்பட்ட இலங்கை பெண்ணை விடுவிக்க இளவரசர் சார்ள்ஸ் உதவி?
Monday, November 1, 2010
றிசானாவுக்கு விடுதலை வேண்டி மூதூரில் கண்ணீர் மல்க பிரார்த்தனை
மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் றிசானா நபீக்கின் விடுதலைக்காக ஒன்று கூடிய மைதானத்தில் பாடசாலை மாண வர்கள், மத்ரஸா மாணவர்கள், சமய, சமூக தலைவர்கள், பொது மக்கள் என எல்லோரும் மைதானத்தினுள் அமர்ந்திருந்தனர். ஆரம்பமாக அஷ்ஷேஹ் எம்.எம். முனாஸ் (ரஸாதி)யினால் சொற்பொழிவு நிகழ்த்தப் பட்டது. இதனை அடுத்து தனித்தனியாக ஸலாதுல் ஹாஜா தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தொழுதனர்.
இதேவேளை, எழுதப் பட்டிருந்த சுலோ கங்களில் இரு புனித தலங்களின் பணி யாளரே எங்கள் ஏழைச் சகோதரி றிசானா நபீக்கை உங்கள் பெரும் தன்மையினால் மன்னியுங்கள்.
“அன்புத் தாயே எங்களது சகோதரியை மன்னியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் அருள் புரியட்டும்” என்றும் எழுதப்பட்டிருந்தன. அல்லாஹ்விடமே இந்த நிலையை வேண்டுகின்றோம். மன்னிக்கும் பனப்பான்மை கொண்ட மனங்களே மன்னித்து விடுங்கள்; விடுதலை செய்யுங்கள் எனவும் சிறுவர்கள் முதல் கூடிய மக்கள் இறைவனிடம் அழுது பிரார்த்தனை செய்தனர். மக்கள் ஒன்றுகூடி றிசானா நபீக்கின் விடுதலைக்காக கண்ணீர் மல்கி அழுது புலம்பிய காட்சி மக்கள் எல்லோ ரையும் மனம் உருகச் செய்தது.
இதேவேளை, சவூதி தூதரகம், சவூதி மன்னர் மற்றும் பணிப்பெண்ணாக பணிபுரிந்த குடும்பத்தார்கள் உள்ளிட்ட வர்களுக்கான கையெழுத்து விடுதலைக்கான மகஜர்களையும் அனுப்புவதற்கான நட வடிக்கை இடம்பெற்றன.
றிசானா நபீக்கின் விடுதலைக்காக எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் விடுதலைக்காக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
றிசானா நபீக் விடுதலை செய்யப்பட வேண்டுமென தந்தை நபீக் சவூதி நாட்டு மன்னர், தனது பிள்ளை பணிபுரிந்த குடும்பத்தார்களிடமும் விடுவிப்புக்கான வேண்டுகோளை விடுப்பதாகக் கூறினார்.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமய கடமையாக நோக்கப்பட வேண்டியுள்ளது
பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டிலே பல நூறு வருடங்கள் சம அந்தஸ்துடனும் உரிமைகளுடனும் வாழ்ந்த வடபுல முஸ்லிம்கள் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை உலக வரலாற்றில் எங்கும் இடம்பெற்றிருக்காத ஒரு பெரும் அநியாயமாகும்.
இது பலஸ்தீன பிரச்சினைக்கு சமனான அல்லது அதை விடவும் பாரதூரமான நிகழ்வாகும். இதனால் முஸ்லிம்களின் பல்வேறுபட்ட உரிமைகள் மீறப்பட்டது மாத்திரமன்றி அவர்களின் வாழ்க்கைத்தரமும் இதனால் படுமோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையிலும், அவர்களது மீள்குடியேற்றக்கனவு இன்னும் நனவாகாமல் இருந்து வருவது மிகவும் வேதனையளிக்கும் விடயமாகும்.
1990 ஆம் ஆண்டிலிருந்து பலமுறை முஸ்லிம்கள் வடக்கிலுள்ள தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொழுதிலும், பல்வேறுபட்ட காரணங்களால் அது முற்றாக கைகூடவில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகள் பற்றிய பயமே முஸ்லிம்கள் முழுமையாகக் குடியேறாமைக்கான பிரதான காரணமாகும்.
கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் பூரணமாக ஆயுதமுனையில் தோற்கடிக்கப்பட்டதன் பின் முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுவரை சுமார் 10000 குடும்பங்கள் சுயவிருப்பின் அடிப்படையில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கு தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் குடும்பங்கள் சகிதம் அங்கு வசிக்கத் தொடங்கியுள்ளனர்.
வட பகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை கேள்விக் குறிக்குள்ளாக்கும் பல விடயங்கள் காணப்படுகின்றன. அவர்களின் அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கின்றமையும் மீள்குடியேற்ற நகர்வுகள் மிகவும் பின் தங்கியுள்ளதற்கான காரணம் எனலாம்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக மீள்குடியேற்றம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற பொழுதிலும், பெரும்பாலான குடும்பங்களின் வதிவிட, குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி வசதிகள் உள்ளிட்ட எத்தனையோ விடயங்கள் இன்னும் பூரணமாக செய்து கொடுக்கப்படவில்லை. இவ்வசதிகள் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படாமல் அவர்களைக் குடியேற்றுவதோ அல்லது குடும்பங்களுடன் அங்கு தொடர்ந்து வசித்து வருவதற்கு விடுவதோ அறவே முடியாத காரியமாகும்.
கடந்த 20 வருட காலப்பகுதிகளில் இவர்களின் குடியேற்றப் பகுதிகளிலிருந்து சகல வளங்களும் பல்வேறுபட்ட தரப்பினரால் அகற்றப்பட்டு, அப்பிரதேசங்கள் எவ்வித வசதிகளுமற்ற நிலையில் காணப்படுகின்றமை மற்றுமொரு காரணமாகும்.
சர்வதேச சமூகமும், நிதி வழங்குனர்களும் புதிதாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன், 1990களில் இடம்பெயர்ந்தவர்களின் விடயத்தில் அக்கறையின்றி, நிதியுவதி வழங்க முன் வராதிருக்கின்றமை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பாதிப்படையச் செய்துள்ளது. இதனைப்பற்றிய எதுவித விழிப்புணர்வையும் பெறாமல் இருப்பதும் கவலை தரும் விடயமாகவே காணப்படுகின்றது.
அண்மையில் இந்திய அரசு 50,000 வீடுகளை அமைத்துத் தருவதற்கு நிதியுதவி வழங்க முன்வந்திருக்கின்றமை, ஏன் இஸ்லாமிய நாடுகள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு நிதியுதவி வழங்க முன்வரக்கூடாது என்ற ஆதங்கத்தை சகல தரப்பினரிடத்திலும் ஏற்படுத்துகின்றது.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமயக்கடமையாக நோக்கப்பட வேண்டும். சகல தரப்பினரும் இதில் ஆர்வம் காட்டவேண்டும். முஸ்லிம் சமூகத்திலுள்ள செல்வந்தர்கள், இஸ்லாமிய நிறுவனங்கள், இஸ்லாமிய நாடுகள், நலன் விரும்பிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரேயணியில் நின்று செயற்படும் போதுதான் ஒரு அர்த்தமுள்ள மீள்குடியேற்றத்தை சாத்தியமாக்கலாம்.
இல்லாவிட்டால் இந்த நாட்டின் பல பிரதேசங்களில் சிதறி வாழ்ந்து வரும் சுமார் 30,000 அகதிக் குடும்பங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாகவே தொடர்ந்தும் காணப்படும்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் றிஸானா நபீக்கை மன்னித்து விடுதலை செய்யக்கோரி மூதூர் மக்கள் ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபடுவதையும் விடுவிக்கக் கோரிய மகஜரில் மதப்பெரியார்கள் கையொப்பம் இடுவதையும் படங்களில் காணலாம். (படம்:- மூதூர் தினகரன் நிருபர் எஸ். கஸ்ஸாலி)
Wednesday, October 27, 2010
பள்ளிவாசல்களுக்கு அண்மையிலுள்ள படை முகாம்கள் அகற்றப்படும்
திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் பாதுகாப்பு படையின ரின் முகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு, கிழக் கில் நிலவிய பயங்கரவாதத்தை ஜனாதிபதியின் சிறந்த வழிகாட்ட லின் மூலமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. அதனால்தான் நானும் இப்பிரதே சத்திற்கு வந்து உங்களது கஷ்டங்க ளையும் குறைகளையும் கேட்டறி கின்றேன் என்றும் பிரதமர் கூறினார்.
கிண்ணியா பெரியபள்ளி வாசலில் திருகோணமலை மாவ ட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்க ளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், இம்மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசாரத்தினூடாக ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்து புனித நகரமாக உருவாக்குவதற்கு மத விவகார அமைச்சர் என்ற வகையில் சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.
மேலும் முஸ்லிம் மக்கள் மூன்று தலைமுறையாக எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அதே போன்று தான் முஸ்லிம் நாடுகள் எமது நாட்டுக்கு பல ஆண்டு காலமாக உதவிகளை வழங்கி வருகிறது. முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு அல்லாஹ் ஆனால் அவர்கள் இன்று பல கூறுகளாக பிரிந்து பிரச்சினையில் இருக்கிறார்கள்.
நாங்கள் போய் சமாதானம் புரிய வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் குர்ஆனில் கூறப்பட்ட மசூரா அடிப்படையில் உங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.
இந்நிகழ்வில் புத்தசாசன பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-தினகரன்-
ஊழல் ஒழிப்பில் இலங்கை 91வது இடத்தை எட்டியுள்ளது
[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 06:36.04 AM GMT +05:30 ] |
சர்வதேச ஊழல் ஒழிப்பு நாடுகளின் பட்டியலின் 2011ம் ஆண்டுக்கான தர வரிசையில் இலங்கை 91ம் இடத்தை எட்டியுள்ளது. கடந்தாண்டு இதே பட்டியலில் 97ம் இடத்தில் இருந்த இலங்கையானது இம்முறை ஆறு இடங்கள் முன்னோக்கி நகர்ந்துள்ளமை திருப்திகரமான ஒரு முன்னேற்றம் என்று கருதப்படுகின்றது. |
ட்ரான்பேரன்சி இன்டர்நெஷனல் எனும் அமைப்பினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது. கடந்த வருடம் 180 நாடுகளில் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், இம்முறை 178 நாடுகள் மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தன. குறித்த ஆய்வின் பிரகாரம் டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஊழல் ஒழிப்பில் முன்னிலை வகிக்கின்றன. அந்த பட்டியலின் பிரகாரம் ஊழல் ஒழிப்பின் அடிப்படையில் பிரிட்டன் 20 ம் இடத்திலும், அமெரிக்கா 22 ம் இடத்திலும், இந்தியா 87 வது இடத்திலும் காணப்படுகின்றன. தெற்காசிய வலய நாடுகளைப் பொறுத்தவரை பூட்டான் ஊழல் ஒழிப்பில் முன்னிலை வகிப்பதுடன், சர்வதேச ரீதியான தர வரிசையில் 36வது இடத்தையும் பிடித்துள்ளது. |
Saturday, October 23, 2010
ஜனாதிபதி பதவியேற்பு : 1.1 மில். மரக்கன்று நட்டு சாதனை படைக்கத் திட்டம்
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த சுற்றாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா,
" ' தெயட்ட செவன ' எனப்படும் தேசிய மர நடுகை வேலைத் திட்டத்தின் கீழ் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி 1.1 மில்லியன் மரங்கள் 11 நிமிடங்களில் நடப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.
மேலும் இதில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலை சிறார்கள் பங்கு பெறுவர்" எனத் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது 65 ஆவது பிறந்த நாளை வருகின்ற நவம்பர் மாதம் 18 ஆம் திகதி கொண்டாடவுள்ளார்.
அதனோடு அவரின் முதலாம் பதவிக்காலமும் நிறைவுக்கு வருகின்றது மேலும் அவர் தனது 2ஆவது பதவிக்காலத்திற்கான 19 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.
கடவுச் சீட்டு உண்மைத் தன்மை குறித்து நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி சோதனை
உலகின் எந்தவொரு நாட்டினதும் கடவுச் சீட்டு மற்றும் வீசா ஆகியவற்றின் உண்மைத் தன்மை குறித்து சோதனை நடத்தக் கூடிய விசேட அமைப்பு ஒன்றை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. போலியான கடவுச் சீட்டுக்கள் மற்றும் வீசாக்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குடிவரவு குடியகழ்வு மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிக நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி இந்த சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச புலனாய்வுப் பிரிவுகளின் ஒத்துழைப்பு இந்த நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அவுஸ்திரேலிய தூதுவரினால் இந்தக் காரியாலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கிண்ணியாவில் ஆட்கடத்தல் பீதி !
-Kinniya News Network-
மூதூரில் படகுப் பாதை விபத்து: கடலில் தத்தளித்த 22 பேர் கடற்படையால் மீட்பு
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா - மூதூரை இணைக்கும் இறால் குழிப் பாதையின் உப்பாற்றின் மேலான பயணிகளுக்கான படகுப் பாதை பழுதடைந்த காரணத்தால் அதில் பயணித்தவர்கள் கடலில் பாய்ந்து தத்தளித்த சம்பவமொன்று இன்று மூதூரில் இடம் பெற்றுள்ளது.
படகுப் பாதையின் இயந்திரம் பழுதடைந்தபோது அதில் சுமார் 70 பேர்வரை பயணித்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இயந்திரம் பழுதடைந்த நிலையில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட படகுப் பாதை கடலின் நடுவே போடப்பட்டிருந்த மின் கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதனையடுத்து மின்சாரம் தாக்கலாம் என்ற அச்சத்தில் அதில் பயணித்த 22 பேர் கடலில் குதித்து தத்தளித்துள்ளனர்.
அப்பிரதேசத்தில் காவல் ரோந்தில் ஈடுபட்ட கடற்படை அவர்களைக் கண்டு விரைந்து வந்த காப்பாற்றியதில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை என்றும் தெரிகின்றது.
தற்போது பழுதடைந்த படகுப் பாதையின் இயந்திரம் பழுது பார்க்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு நீண்ட காலமாகியும் கிண்ணியா-மூதூர் பாதை இன்னும் சரிவர நிர்மாணிக்கப்படாமை பெரும் அதில் பயணிக்கும் சிரமத்துக்குள்ளாக்கும் விடயமாகும் என்று பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-KE News Team-
Followers
Blog Archive
-
▼
2010
(23)
-
▼
December
(10)
- 4 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவு
- க. பொ. த சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்
- பரிசளிப்பு வைபவம்:
- பத்திரிகைகள் விநியோகிக்கப்படாமையால் வாசகர்கள் சிர...
- ரிஷானாவின் தண்டனை நிறுத்தம்
- தொடரும் மழையுடன் கூடிய காலநிலை:
- கிண்ணியா கடற்பரப்பில் “டொல்பின்“கள்:கிண்ணியா கடற்ப...
- கிண்ணியா கடற்பரப்பில் தோன்றும் பாம்புகள்:
- கட்டையாற்றுப் பாலத்தின் கீழ் திடீரென படையெடுத்த பா...
- கிண்ணியாவில் கலாச்சார மண்டபம் அமைத்துத்தருமாறு மக...
-
►
November
(7)
- கிண்ணியாவில் அடைமழை
- கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி க...
- வடக்கு, கிழக்கு கடல் கொந்தளிப்பு:
- சவுதியில் குற்றம்சுமத்தப்பட்ட இலங்கை பெண்ணை விடுவி...
- றிசானாவுக்கு விடுதலை வேண்டி மூதூரில் கண்ணீர் மல்க ...
- முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமய கடமையாக நோக்...
- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கு...
-
▼
December
(10)