Monday, December 13, 2010

4 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவு

இம்முறை வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி கிண்ணியாவில் நான்கு போ் மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளனர்.திருகோணமலை மாவட்டத்திலிருந்து மொத்தம் 8 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ளனர்.இவர்களில் நான்கு பேர் கிண்ணியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
13.12.2010
திங்கட்கிழமை

க. பொ. த சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்

க. பொ. த சாதாரண தர பரீட்சைகள் இன்று 13 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவூள்ள இப்பரீட்சைக்கு நாடு முழுவதிலுள்ள 3, 3,804 பரீட்சை நிலையங்களில் 5 இலட்சத்து 8 ஆயிரத்து 416 பரீட்சார்த்திகள் தோற்றவூள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

பரீட்சார்த்திகள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனுமதி அட்டைகளுடன் பரீட்சை ஆரம்பமாவதற்கு சுமார் 30 நிமிடத்துக்கு முன்னதாகவே பரீட்சை மண்டபத்துக்கு வரு மாறும், பரீட்சை மண்டபத்துக்குள் செல்வதற்கு முன்னர் அனைவரும் உடல் பரிசோதிக்கப்பட்டே அனும திக்கப்படுவார்கள் எனவூம் பரிட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
தற்போது மழைக்காலம் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளுடன் வரு மாறும் ஆணையாளர் பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு முழுவது முள்ள 3804 பரீட்சை நிலையங்களிலும் 60,000 பரீட்சகர்கள் கடமையாற்றவூள்ளனர். 3 இலட்சத்து 94 ஆயிரத்து 603 பாடசாலை மாணவர்களும், ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 813 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இந்த பரீட்சைக்குத் தோற்றவூள்ளனர்.

பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சை அனுமதி அட்டையூடன் தமது ஆளடை யாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் தேசிய அடையாள அட்டை அல்லது தபால் மா அதிபரினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். இறுதி நேரம்வரை இவ்விரண்டு அடையாள அட்டைகளையூம் பெற முடியாமல் போனவர்கள் அதிபரிடம் பெறப்பட்ட உறுதிப்படுத்தல கடிதமொன்றை பரீட்சை ஆரம்பமாகும் முதல் நாளன்றே பரீட்சை மண்டபத்தின் பிரதான பரீட்சகரிடம் காண்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணை யாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

பரீட்சை மண்டபத்தினுள் அனுமதி அட்டை,அடையாள அட்டை, பேனை, பென்சில் தவிர்ந்த வேறு பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

சிவப்பு நிற, ஊதா நிற பேனைகள்,அழி இறப்பர்கள், டிப்பெக்ஸ்கள், ஹைய்லைட் வர்ண பேனைகள் என்ப வற்றை எடுத்துச் செல்லுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது

13.12.2010
திங்கட்கிழமை

Friday, December 10, 2010

பரிசளிப்பு வைபவம்:

குறிஞ்சாக்கேணி அறபா மஹா வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் இன்று காலை 9 மணிக்கு பாடசாலை அதிபரின் தலைமையில் குறிஞ்சாககேணி அறபா மஹா வித்தியாலத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள்,கிண்ணியா வலயக்கல்வி அதிகாரிகள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்,வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்,புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருந்த மாணவர்கள் ஆகியோர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

10.12.2010
வெள்ளிக்கிழமை

பத்திரிகைகள் விநியோகிக்கப்படாமையால் வாசகர்கள் சிரமம்:

குறிஞ்சாக்கேணி பொது நூலகத்திற்கு கடந்த இரு நாட்களாக பத்திரிகைகள் வழங்கப்படவில்லையென வாசகர்கள் அங்கலாய்க்கின்றனர்.கிண்ணியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் இந்நூலகம் கடந்த இரு நாட்களாக பத்திரிகைகள் இன்மையால் வாசகர்களின் வரவு குறைந்துள்ளது.இது தொடர்பாக குறிஞ்சாக்கேணி நூலகாரிடம் வினவியபோது இதற்கு முற்றிலும் பிரதேச சபையினரே பொறுப்பு.அவர்கள் பத்திரிகைகள் வாங்குவதற்கு பணம் தரவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்வதற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் பத்திரிகைகள் அத்தியவசியமானவை.எனவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உரிய அதிகாரிகளை வாசகர்களும்,மாணவர்களும் கேட்டுக் கொள்கின்றனர்.
10.12.2010
வெள்ளிக்கிழமை

Tuesday, December 7, 2010

ரிஷானாவின் தண்டனை நிறுத்தம்

ரிஷானாவின் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததை அடடுத்தே இந்த தண்டனையை தற்காலிகமாக இடை நிறுத்த சவுதி மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலவாழ்வு அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ரிஷானாவின் தண்டனையை ரத்துச் செய்யும் அதிகாரம் சவுதி மன்னருக்குக் கிடையாது என்றும் இறந்த குழந்தையின் பெற்றோர் இணங்கும் பட்சத்திலேயே தண்டனைக்கான இரத்தப்பணம் வழங்கப்பட்டு ரிஷானாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

தேவைப்படும் பட்சத்தில் அந்த ரத்தப்பணம் எனப்படுகின்ற, கொலைக்கு மன்னிப்பு வழங்கப்படுவதற்காக அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைப் பணத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்த மரணதண்டனை இடைநிறுத்தம் குறித்த செய்தியைக் கேட்டு ரிஷானாவின் தாய் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

-BBC Tamil-

Saturday, December 4, 2010

தொடரும் மழையுடன் கூடிய காலநிலை:

கிண்ணியாவில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதுடன் பல நெல் வயல்களும் நீரில் மூழ்கியுள்ளது.மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இதனால் கடல் மட்டம் சற்று உயர்ந்துள்ளதுடன் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்படுகின்றமையால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கூறப்பட்டுள்ளது.

04.12.2010 - சனிக்கிழமை
-F.Fahath Ahmed-

கிண்ணியா கடற்பரப்பில் “டொல்பின்“கள்:கிண்ணியா கடற்பரப்பில் “டொல்பின்“கள்:



கி்ண்ணியா கடற்பரப்பில் சிலநாட்களாக “டொல்பின்“கள் காணப்பட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு கிண்ணியா கடற்பரப்பில் “டொல்பின்“கள் காணப்படுவது இதுவே முதன் முறையாகும்.

04.12.2010 - சனிக்கிழமை
-F.Fahath Ahmed-

கிண்ணியா கடற்பரப்பில் தோன்றும் பாம்புகள்:

கடந்த சில நாட்களாக கிண்ணியா கடற்பரப்பில் பாம்புகள் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.இதனால் மக்களிடையே அச்சம் நிலவுகின்றது.மீன்பிடி வலைகள் மற்றும் தூண்டில்களில் பாம்புகள் மாட்டிக் கொள்வதாகவும் இரவு வேளைகளிலே அதிகமாக பாம்புகள் காணப்படுவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.தற்போது அதிகளவில் இறால்கள் பிடிக்கப்படும் காலம் என்பதால் இரவு வேளைகளில் அதிமாக இறால் பிடிப்பவர்கள் கடலுக்குச் செல்வார்கள் இவர்களது வலைகளில் அதிகமாக பாம்புகள் சிக்குவதாகவும் இதனால் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

04.12.2010 - சனிக்கிழமை
-F.Fahath Ahmed-

கட்டையாற்றுப் பாலத்தின் கீழ் திடீரென படையெடுத்த பாம்புகள்:

கிண்ணியா கட்டையாற்றுப் பாலத்தின் கீழ் திடீரென பாம்புகள் தோன்றியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேற்று மாலை முதல் இப்பாம்புகள் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.ஆயிரக்கணக்கான வெண்ணிறப் பாம்புகள் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.இதே போன்று கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பும் இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.இதனால் மீண்டும் மக்களிடையே சுனாமி அச்சம் நிலவுவதாக தெரிவிக்கின்றனர்.அதேபோல் தோணா கடலிலும் இவ்வாறு பாம்புகள் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

-http://kinniyaexpress.com-

கிண்ணியாவில் கலாச்சார மண்டபம் அமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை:

கிண்ணியாவில் கலாச்சார மண்டபம் ஒன்றினை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.சுமார் 90,000 மக்கள் தொகையினைக் கொண்ட கிண்ணியாவில் இதுவரை காலமும் ஒரு கலாச்சார மண்டபமும் அமைக்கப்படவில்லை.எனவே கலாச்சார மண்டபம் ஒன்றினை அமைத்துத் தருமாறு கிண்ணியா மக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

-Kinniyaexpress.com-

Followers