Tuesday, January 11, 2011

கிண்ணியாவில் சில வெள்ளப் பாதிப்புக்கள்:














புனரமைப்புச் செய்யப்பட்டு மூன்று வருடங்களாகும் கிண்ணியா பிரதான வீதியின் தற்போதைய நிலை..(கிண்ணியா பழைய வைத்தியசாலை முன்பாக உள்ள வீதி)
- :: Kinniya Express :: -

கிண்ணியாவில் வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு



தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.கிண்ணியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குறைந்த பட்சம் 600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன அத்துடன் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.கிண்ணியாவில் சுமார் ஆறு பாடசாலைகளில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர்.



அத்துடன் கந்தளாய்,வான்எல மற்றும் கிண்ணியாவிலுள்ள அனைத்துக் குளங்களின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் கிண்ணியாவின் பெரும் பகுதி நீரில் மூழ்கியுள்ளது.குறிப்பாக ”வான்எல,ஆயிலியடி,தம்பலகாமம்,சூரங்கல்,நடு ஊற்று,குரங்கு பாஞ்சான்” போன்ற பிரதேசங்களிலுள்ள ஏராளமான நெல் வயல்களும் ஏனைய பயிர்ச்செய்கை நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதுடன் தம்பலகாமம் பகுதியிலுள்ள வீதிகள் அனைத்தும் நீரினால் மூழ்கியுள்ளன.இதனால் கிண்ணியாவின் ஊடான அனைத்துப் போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.
குளங்களிலிருந்து வெளியேறும் நீர் கிண்ணியாவிலுள்ள பாலங்களினூடாக பாய்வதால் போக்குவரத்தில் பாரிய இடர்பாடுகளை சந்திப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.நீர் பாய்ந்தோடும் வேகம் காரணமாக கிண்ணியாவின் நான்கு பாலங்களினூடாக பயணம் செய்ய மக்கள் அஞ்சுகின்றனர்.இவ்வாறு பாய்கின்ற நீரானது உவர் நிலப்பகுதியைச் சென்றடைவதால் அருகிலுள்ள வீடுகளுக்குள் உட்சென்றுள்ளதால் மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர் நோக்கியுள்ளனர்.


அத்துடன் தம்பலகாமம் பகுதியிலுள்ள மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கடும் மழையால் பெரும்பாலான வீதிகள் சேதமடைந்திருப்பதுடன் வழமையான போக்குவரத்துக்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.


11.01.2011
செவ்வாய்க்கிழமை

Tuesday, January 4, 2011

அல்ஹாஜ் ஆர்.எம்.சக்கரியா காலமானார்

புரவலர் அல்ஹாஜ் ஆர்.எம்.சக்கரியா நேற்று 04-01-2011 காலமானார்.கிண்ணியாவில் பல சமூகப்பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.

Followers