Wednesday, October 27, 2010

ஊழல் ஒழிப்பில் இலங்கை 91வது இடத்தை எட்டியுள்ளது

[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 06:36.04 AM GMT +05:30 ]

சர்வதேச ஊழல் ஒழிப்பு நாடுகளின் பட்டியலின் 2011ம் ஆண்டுக்கான தர வரிசையில் இலங்கை 91ம் இடத்தை எட்டியுள்ளது. கடந்தாண்டு இதே பட்டியலில் 97ம் இடத்தில் இருந்த இலங்கையானது இம்முறை ஆறு இடங்கள் முன்னோக்கி நகர்ந்துள்ளமை திருப்திகரமான ஒரு முன்னேற்றம் என்று கருதப்படுகின்றது.

ட்ரான்பேரன்சி இன்டர்நெஷனல் எனும் அமைப்பினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது. கடந்த வருடம் 180 நாடுகளில் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், இம்முறை 178 நாடுகள் மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தன.

குறித்த ஆய்வின் பிரகாரம் டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஊழல் ஒழிப்பில் முன்னிலை வகிக்கின்றன.

அந்த பட்டியலின் பிரகாரம் ஊழல் ஒழிப்பின் அடிப்படையில் பிரிட்டன் 20 ம் இடத்திலும், அமெரிக்கா 22 ம் இடத்திலும், இந்தியா 87 வது இடத்திலும் காணப்படுகின்றன.

தெற்காசிய வலய நாடுகளைப் பொறுத்தவரை பூட்டான் ஊழல் ஒழிப்பில் முன்னிலை வகிப்பதுடன், சர்வதேச ரீதியான தர வரிசையில் 36வது இடத்தையும் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

Followers