
உலகின் எந்தவொரு நாட்டினதும் கடவுச் சீட்டு மற்றும் வீசா ஆகியவற்றின் உண்மைத் தன்மை குறித்து சோதனை நடத்தக் கூடிய விசேட அமைப்பு ஒன்றை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. போலியான கடவுச் சீட்டுக்கள் மற்றும் வீசாக்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குடிவரவு குடியகழ்வு மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிக நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி இந்த சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச புலனாய்வுப் பிரிவுகளின் ஒத்துழைப்பு இந்த நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அவுஸ்திரேலிய தூதுவரினால் இந்தக் காரியாலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment