கிண்ணியாவில் சில நாட்களாக மக்கள் மத்தியில் ஆட்கடத்தல் தொடர்பாக அச்சம்நிலவுகின்றது.இதுவரை இது தொடர்பாக பல சம்பவங்கள் பதிவாகயுள்ளதாக கிண்ணியா மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் கிண்ணியாவின் கிராமப்பகுதிகளில் இரவு ஒன்பது மணிக்குப்பின்னர் மக்கள் நடமாட்டம் குறைந்த்துள்ளதாக எமது உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுபபுவதட்கும் பெற்றோர்கள் அஞ்சுவதாக கூறப்படுகின்றது.இது தொடர்பாக கிண்ணியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் இரவு வேளைகளில் தேவையின்றி நடமாடுவதை குறைத்துக்கொள்ளுமாரும் பொதுமக்களுக்கு கிண்ணியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.புதையல் தோண்டும் நோக்கிலே இவ்வாறான கடத்தல்கள் இடம்பெறுவதாக மக்கள் கூறுகின்றனர். கடத்தப்படவிருந்த பல சம்பவங்கள் பொதுமக்களால் முறியடிக்கப்பட்டுள்ளன.இருந்தும் கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமல் போனதாக மக்கள் கூறுகின்றனர்.
-Kinniya News Network-
-Kinniya News Network-
No comments:
Post a Comment