தனது முகாமையாளரின் ஊடாக அவர் இது குறித்து வழங்கிய தகவலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் நடக்கவிருக்கும் டெஸ்ட் ஆட்டங்களை முன்னிட்டு இலங்கை கிரிக்கட்டின் டெஸ்ட் அணித் தலைவராக தான் தற்காலிகமாக தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 2015 இல் நடக்கவிருக்கும் உலக கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு ஒரு இளம் தலைவர் தேவை என்று தான் நம்புவதால், கடந்த உலக கிண்ணப் போட்டிக்கு முன்னதாகவே தான் இந்த முடிவை எடுத்திருந்ததாக 33 வயதான சங்கக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து அணியுடனான சுற்றுத்தொடருக்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குமார் சங்ககாரவின் ஊடக பேச்சாளர் சாலி ஓஸ்டின் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விலகல் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகளுக்கு ஏற்கனவே தான் அறிவித்துள்ளதாகவும் தற்போதைய போட்டியிகளிலிருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை எனவும் தொடர்ந்து விளையாடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
Kumar Sangakkara statement
“தேசிய அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நான் தீர்மானித்துள்ளேன். எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு புதிய, சிறந்த அணித் தலைவரை தெரிவுசெய்ய வேண்டியதன் அவசியத்தை நான் உணர்ந்துள்ளேன்.
இவ்வாண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நான் இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தேன். அடுத்த உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும்போது எனக்கு 37 வயதாகியிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் தலைவர் ஒருவர் அவசியமாகிறார்.
அணித் தலைவராக இருந்த காலப்பகுதியில் நாட்டுக்காக விளையாடியதில் மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டு. எனினும் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிக்கொண்டமை வருத்தமளிக்கிறது. ஆனபோதும் நாம் சிறப்பாக விளையாடினோம் என்பதில் ஐயமில்லை.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள எமது ரசிகர்கள் எமக்கு பக்கபலமாக இருந்தார்கள். அவர்களின் ஒத்துழைப்பை நான் என்றும் மறக்க மாட்டேன். உத்வேத்துடன் முன்னேறுவதற்கு அவர்கள் தந்த ஆதரவும் காரணமாக அமைந்திருந்தது. அதனால் ஒவ்வொரு வீரரும் நன்றிக்கடன் உடையவராக இருக்கிறோம்.
அணித் தெரிவாளர்களை நேற்று சந்தித்து எனது தீர்மானம் குறித்து ஆலோசித்தேன். புதிதாக நியமிக்கப்படும் தலைவர் சிறந்த நிலையில் முன்னேறுவதற்கு நாம் இடமளிக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் குறிப்பிட்டேன்.
ஓய்வுபெறுவது குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. எதிர்காலத்திலும் சிறந்த முறையில் எனது திறனை வெளிக்காட்ட முயற்சி செய்யவுள்ளேன்.
இந்தத் தருணத்தில் எனது அணிவீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் அணியை சிறப்பாக வழிநடத்திச்செல்ல உறுதுணையாக இருந்த எனது மனைவி, பிள்ளைகள் குடும்பத்தாருக்கும் நன்றி பகர்கிறேன். ,
-BBC & Virakesri-
No comments:
Post a Comment