க. பொ. த சாதாரண தர பரீட்சைகள் இன்று 13 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவூள்ள இப்பரீட்சைக்கு நாடு முழுவதிலுள்ள 3, 3,804 பரீட்சை நிலையங்களில் 5 இலட்சத்து 8 ஆயிரத்து 416 பரீட்சார்த்திகள் தோற்றவூள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
பரீட்சார்த்திகள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனுமதி அட்டைகளுடன் பரீட்சை ஆரம்பமாவதற்கு சுமார் 30 நிமிடத்துக்கு முன்னதாகவே பரீட்சை மண்டபத்துக்கு வரு மாறும், பரீட்சை மண்டபத்துக்குள் செல்வதற்கு முன்னர் அனைவரும் உடல் பரிசோதிக்கப்பட்டே அனும திக்கப்படுவார்கள் எனவூம் பரிட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
தற்போது மழைக்காலம் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளுடன் வரு மாறும் ஆணையாளர் பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு முழுவது முள்ள 3804 பரீட்சை நிலையங்களிலும் 60,000 பரீட்சகர்கள் கடமையாற்றவூள்ளனர். 3 இலட்சத்து 94 ஆயிரத்து 603 பாடசாலை மாணவர்களும், ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 813 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இந்த பரீட்சைக்குத் தோற்றவூள்ளனர்.
பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சை அனுமதி அட்டையூடன் தமது ஆளடை யாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் தேசிய அடையாள அட்டை அல்லது தபால் மா அதிபரினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். இறுதி நேரம்வரை இவ்விரண்டு அடையாள அட்டைகளையூம் பெற முடியாமல் போனவர்கள் அதிபரிடம் பெறப்பட்ட உறுதிப்படுத்தல கடிதமொன்றை பரீட்சை ஆரம்பமாகும் முதல் நாளன்றே பரீட்சை மண்டபத்தின் பிரதான பரீட்சகரிடம் காண்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணை யாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
பரீட்சை மண்டபத்தினுள் அனுமதி அட்டை,அடையாள அட்டை, பேனை, பென்சில் தவிர்ந்த வேறு பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
சிவப்பு நிற, ஊதா நிற பேனைகள்,அழி இறப்பர்கள், டிப்பெக்ஸ்கள், ஹைய்லைட் வர்ண பேனைகள் என்ப வற்றை எடுத்துச் செல்லுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது
திங்கட்கிழமை
No comments:
Post a Comment